Welcome to Jettamil

சுட்டெரிக்கும் வெயிலில் ‘நிழல்’ தரும் சாக்கு படல்கள் – நல்லூர் பிரதேச சபையின் நூதன முயற்சி

Share

சுட்டெரிக்கும் வெயிலில் ‘நிழல்’ தரும் சாக்கு படல்கள் – நல்லூர் பிரதேச சபையின் நூதன முயற்சி

யாழ். குடாநாட்டில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, டிராஃபிக் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பது வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

இதனை உணர்ந்த நல்லூர் பிரதேச சபை, ஒரு நூதன முயற்சியாக வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு மேலாக சாக்கு படல்களைக் கட்டி நிழல் தரும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

முதற்கட்டமாக நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தைப் பகுதியில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிழல் தரும் கட்டமைப்பினால் வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவு விடுபட முடிவதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இந்தச் செயல், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை