Welcome to Jettamil

இந்தியா வரவிருந்த ஈரானிய விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!

Share

இந்தியா வரவிருந்த ஈரானிய விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் மஷ்ஹத் (Mashhad) சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஹான் ஏர் (Mahan Air) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

நேற்று (30.03.2026) திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் போது, விமானம் தனது பயணத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையிலேயே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெஹ்ரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த விமானமானது மனிதாபிமானப் பணியின் ஒரு பகுதியாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பதற்காக இந்த வாரம் புது டில்லிக்குச் செல்லத் தயாராக இருந்ததாகத் தெரியவருகிறது.

ஈரானின் முக்கிய தனியார் விமான நிறுவனமான மஹான் ஏர், ஆசியாவின் பல பகுதிகளுக்குத் தனது சேவைகளை வழங்கி வரும் நிலையில், மனிதாபிமானப் பணியில் ஈடுபடவிருந்த விமானம் தாக்கப்பட்டமை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ள போதிலும், அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வௌியாகவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை