Welcome to Jettamil

இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்க முடியாது – அமெரிக்கா எடுக்கும் அதிரடி முடிவு

Share

இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்க முடியாது – அமெரிக்கா எடுக்கும் அதிரடி முடிவு

ஈரான் மீதான போருக்காகவும், ஆயுத இருப்பை நிரப்பவும் பென்டகன் கோரிய 200 பில்லியன் டொலர் மேலதிக நிதியை அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் பீட்டர் வெல்ச் (Peter Welch) வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.

“முடிவில்லாத போர்களுக்கு (Forever War) துணை போக முடியாது” எனத் தெரிவித்த அவர், முறையான விவாதங்கள் இன்றி இந்தப் போருக்கு நிதி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது எனச் சாடியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த நிதி கோரிக்கைக்கு ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதேவேளை, இஸ்ரேலுக்கு 660 மில்லியன் டொலர் பெறுமதியான சுமார் 20,000 பாரிய குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதைத் தடுக்கும் தீர்மானத்திற்கும் செனட்டர் வெல்ச் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட அமெரிக்கக் குண்டுகளைக் கொண்டு இஸ்ரேல் ஈரானில் ஒரு “முழுமையான போரை” (Total War) நடத்தி வருவதாகவும், மேலதிகமாக ஆயுதங்களை வழங்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) முன்மொழிந்த இந்தத் தீர்மானங்களுக்குப் பல டெமாக்ரட் செனட்டர்கள் ஆதரவளித்துள்ளனர்.

“கெட்டவர்களை ஒழிக்கப் பணம் தேவை” எனப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) வாதிட்ட போதிலும், நிதி வழங்குவதற்கு முன்னதாகப் பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரிபப்ளிகன் செனட்டர் ஜான் கென்னடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போரினால் அமெரிக்கப் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை