குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்! எரிபொருள் தொட்டிகள் தீப்பற்றி எரிந்தன
குவைத் சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரதான எரிபொருள் சேமிப்புத் தொட்டியைக் குறிவைத்து இன்று (25.03.2026) பாரிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் நடத்தப்பட்டவுடன் விமான நிலையத்தில் அவசரகால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தத் திடீர் தாக்குதலில் எவருக்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், பொருள் சேதங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.




