Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெடுக்குநாறி  சிவன் ஆலய அராஜகம் ஜனாதிபதித் தேர்தல் இலக்கா – சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி

IMG 20240311 WA0123

வெடுக்குநாறி  சிவன் ஆலய அராஜகம் ஜனாதிபதித் தேர்தல் இலக்கா – சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி

வவுனியா வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிசாரின் அடாவடித்தனத்துக்கு பின்னால் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து வாக்குகளை பெற தென்னிலங்கை முயற்சிக்கின்றதா? என யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் கேள்வி எழுப்பினார்.

திங்கட்கிழமை (11) நல்லை ஆதீனத்திற்கு முன்னால்  வவுனியா வெடுக்கு நாரி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்த விடாமல் பொலிசார் அராஜகம் புரிந்தமைக்கு கண்டனம் தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டிடமான வவுனியா வடக்கு நாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்ற நிலையில் அதனை முழுமையான பௌத்த பூமியாக மாற்றுவதற்கு அரச இயந்திரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு வழிப்பாடாக கடந்த சிவராத்திரி தினத்தன்று சிவ பூஜை  நடத்த விடாமல் இலங்கை காவல்துறை சப்பாத்து கால்களுடன் ஆலயத்துக்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டமை அனைவரும் அறிந்ததே.

இலங்கை அரசியலமைப்பில் மத வழிபாட்டுக்கான உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை காவல்துறை சட்டத்தை மீறி காடைத்தனமாக செயற்பட்டமைக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுப்பதோடு  கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

நீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் மீறி இருந்தால் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் செயற்பட்டமைக்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா?

நாடு தான் போது பொருளாதார நெருக்கடியில் இசைக்கு உள்ள நிலையில்  சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் பௌத்த மயமாக்கலையும் காணி சுபீகரிப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

இதன் பின்னணிகளை ஆராய்ந்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தென் இலங்கை வாக்குகளை பெறுவதற்காக இனவாத தீயினை மூட்டுவதற்கான முன்னேற்பாடாக வெடிநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற அடாவடித்தனத்தை நோக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment