Welcome to Jettamil

குறுகிய மின்தடைகள் சில நாட்களுக்குத் தொடரும் – மின்சாரசபை அறிவிப்பு…

Share

அடுத்த சில நாட்களுக்கு நாடளாவிய ரீதியாக குறுகிய நேர மின் தடைகள் ஏற்படலாம் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்று முற்பகல் 11 மணியளவில்  மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் பிரச்சினையால், நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.

இதனால், அத்தியாவசிய சேவைகளான போக்குவரத்து, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தடைப்பட்டதுடன், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டன.

ஆறு மணிநேரத்துக்குப் பின்னர் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், நேற்று இரவு வரை பல இடங்களில் மின்சாரத் தடை நீடித்த்து.

சில இடங்களில் சுழற்சி முறையிலும் மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திடீர் மின் தடைக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் சட்டப்படி வேலை போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால், சதிவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள எழுந்துள்ளன.

இந்த நிலையில் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வருவதாக தொழிற்சங்கம் நேற்று அவசர முடிவை அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900  மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களுக்கு, நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின் தடைகள் ஏற்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை