Jet tamil
இலங்கை

கொரோனாவால் அதிகமான மக்கள் இறக்க போகின்றனர் – பில்கேட்ஸ்

bilgates

கொரோனா வைரஸ் குறித்து முன்பே கணித்த கோடீஸ்வரரும், மைக்ரோசொப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், இன்னும் இரண்டு பேரழிவுகளை மனிதர்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பல லட்சம் உயிர்களை எடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட வைரஸ் குறித்து கடந்த 2015-ஆம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கணித்திருந்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே உலக நாடுகளை பில்கேட்ஸ் எச்சரித்த போதும், அதை பெரிதாக எடுத்து கொள்ளாததன், விளைவை இன்று உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வருகின்றன.

5 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி கொரோனா போன்றதை கணித்தீர்கள் என ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு,

பில்கேட்ஸ் பதில் அளிக்கையில், சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்றுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை. எபோலா போன்ற தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே பிறருக்கும் பரவி விடுகிறது.

மனிதர்கள் எதிர்பார்க்காத வேறு பேரழிவுகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு, பில்கேட்ஸ் இரண்டு பேரழிவுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

முதலில் பருவநிலை மாற்றம். கொரோனாவில் இறந்தவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் இனி பருவநிலை மாற்றத்தால் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும். அடுத்த பேரழிவை பற்றி பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment