தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்
தே.மு.தி.க தலைவரும் தென்னிந்திய திரையுலக பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) அதிகாலை காலமானார்.
இந்நிலையில் அவரது உடல் சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, திரையுலகத்தினர் மற்றும் அரசியல் தரப்பினர், ரசிகர்கள் என பலரும் தற்போது இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக் கழகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.