Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

ரவிராஜ் அவர்களது நினைவேந்தல்

IMG 20241110 WA0145

ரவிராஜ் அவர்களது நினைவேந்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமரர் நடராசா ரவிராஜின் 18 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுச் சிலையருகில் இன்று(10) அனுஷ்டிக்கப்பட்டது.

அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ், ஈகைச் சுடர் ஏற்றி
நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ரவிராஜின் உருவச்சிலைக்கு
மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமரர் நடராஜா ரவிராஜ், 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மனித உரிமை இல்லத்தை நடாத்தி வந்த ரவிராஜ், 1998 – 2001 ஆண்டுகளில் யாழ். மாநகர சபை உறுப்பினராகவும், பிரதி முதல்வராகவும், முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரு தடவைகளும் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment