Welcome to Jettamil

அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி இல்லை – ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

Share

அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி இல்லை – ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்கள் தரையிறங்குவதற்கு அமெரிக்காவும், கொழும்புத் துறைமுகத்திற்குத் தனது கடற்படைக் கப்பல்களை அனுப்ப ஈரானும் அனுமதி கோரியிருந்தன.

மார்ச் 9 மற்றும் 13 ஆகிய திகதிகளில் முன்வைக்கப்பட்ட இந்த இரு நாடுகளின் கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

எமது மேசை மீது அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கோரிக்கைகளும் ஒரே நேரத்தில் இருந்தன. போர்ச் சமிக்ஞைகள் தோன்றியிருந்த அந்தத் தருணத்தில், ஏதேனும் ஒரு தரப்பிற்கு அனுமதி வழங்கியிருந்தால் இலங்கையின் நடுநிலைமை கேள்விக்குறியாகியிருக்கும்” என ஜனாதிபதி விளக்கமளித்தார்.

ஒரு தரப்பிற்கு இடமளித்திருந்தால், எங்கோ தூரத்தில் நடக்கும் போர் மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

வல்லரசு நாடுகளின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், இலங்கையை ஒரு போர் வலயமாக்க இடமளிக்காமல் நடுநிலைமைக் கொள்கையைப் பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி பெருமிதம் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை