Welcome to Jettamil

எரிபொருள் விலையில் மாற்றம் தவிர்க்க முடியாதது! : ஜனாதிபதி தெரிவிப்பு

Share

எரிபொருள் விலையில் மாற்றம் தவிர்க்க முடியாதது! : ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை ஒரு டொலர் உயர்ந்தால், நாட்டின் உள்நாட்டுச் சந்தையில் எரிபொருளின் விலை இரண்டு ரூபாய் உயரும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், நாடுகள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் எரிபொருள் தேவையில் 43 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் தனியார் துறையினர், தற்போது நிலவும் நஷ்டம் காரணமாக எரிபொருள் இறக்குமதியைக் கைவிட நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

ஒரு கப்பல் எரிபொருளை இறக்குமதி செய்வதால் தமக்கு 55 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை ஜனாதிபதி சபையில் உறுதிப்படுத்தினார்.

தனியார் துறையினரால் தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் தொடர்ந்து விற்பனை செய்ய முடியாது என்பதால், எரிபொருள் விலைகள் குறித்து அரசாங்கம் மிக விரைவாகச் செயல்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச விலை உயர்வுகளுக்கு ஏற்ப உள்நாட்டு விலைகளைச் சீரமைக்காவிட்டால், எரிபொருள் விநியோகச் சங்கிலி முற்றாகப் பாதிக்கப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை