Welcome to Jettamil

இது ஆரம்பம் தான்… இனி கைதுகள் தொடரும் – ஜனாதிபதி

Share

இது ஆரம்பம் தான்… இனி கைதுகள் தொடரும் – ஜனாதிபதி

“ஊழல்வாதிகள் கலக்கமடைய தேவையில்லை – அரச நிதி மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்”

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிரான விசாரணைகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நொச்சியாகமவில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தாம் எவரையும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

“கைதுகள் இடம்பெறுவதையிட்டு ஊழல்வாதிகள் கலக்கமடைய தேவையில்லை. இது ஆரம்பம் தான். இனி கைதுகள் தொடரும்” என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை