Welcome to Jettamil

104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள் நாட்டை வந்தடைந்தன; பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்!

Share

104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள் நாட்டை வந்தடைந்தன; பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

புதன்கிழமை (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த பஸ்கள் தற்போது கப்பலிலிருந்து இறக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மிக விரைவில் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்படவுள்ளன.

இந்த புதிய பஸ்கள் சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான Foton International Corporation நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் போக்குவரத்து துறையில் தரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், இந்த மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்வதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மே மாதம் கைச்சாத்திடப்பட்டது. அதன் முதற்கட்டமாகவே 104 பஸ்கள் தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பஸ்கள், பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் உயர்தரமான பயண அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்தி, மக்களுக்கு நம்பகமான மற்றும் திறன் மிக்க சேவையை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சியில் இந்த புதிய மெட்ரோ பஸ்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை