Welcome to Jettamil

Update – ஆசிரியர் சேவையில் வேலைவாய்ப்பு, டிப்ளோமா தகைமையுடன் விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு..!

Share

நாடு முழுவதும் அதிக வெற்றிடங்கள் காணப்படுவதால் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்..

இது நிரந்தரமான அரச வேலைவாய்ப்பு என்பதுடன், மாத சம்பளம் 33090 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இவ் வெற்றிடங்கள் டிப்ளோமா கற்கை தகைமையுடன் விண்ணப்பிக்க மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

அத்துடன் குறித்த வெற்றிடம் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவையில் நாட்டில் காணப்படும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களும்,

மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தகவல் தொழில்நுட்பம் , மனையியல் , அழகியல் பாடங்களுக்கு ( சித்திரம் , சங்கீதம் , நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 ஆம் வகுப்பின் 1 ( இ ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை -2021.

இந்த பதவி வெற்றிடங்களுக்கு
டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தகைமை பெற்ற ஆண் , பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .

குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி : 2021/03/31 ஆகும்.

வயதெல்லை: 18 வயது பூர்த்திசெய்யப்பட்டிருப்பதுடன் , 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : ” The Commissioner General of Examinations , Organizations and Foreign Examinations Branch , Department of Examinations , Sri Lanka , Post Box 1503 , Colombo.

முழு விவரங்களுக்கும், விண்ணப்பப் படிவம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

வர்தமானி அறிவிப்பு (மும் மொழிகளில்) – Download

விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல் (மும் மொழிகளில்) – Download

மற்றவர்கள் பயன்பெற இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பம் : Apply online

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்

Join viber

Join Whatsapp

Join Telegram

Join Facebook

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை