யாழில் மினி சூறாவளித் தாண்டவம்! நயினாதீவில் தூக்கி வீசப்பட்ட கொட்டகைகள்
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (20) காலை பல இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.
இதன்போது நயினாதீவுப் பகுதியில் திடீரென வீசிய மினி சூறாவளியால், நயினாதீவு இறங்குதுறைப் பகுதியில் பக்தர்களின் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த பாரிய தகரக் கொட்டகைகள் பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளன.
தீவகப் பகுதிகளில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக, நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கான படகுச் சேவைகள் தற்போது தாமதமடைந்துள்ளன.
இதனால் யாத்திரைக்காக வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால், பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதுடன், இடையிடையே பலத்த காற்றும் வீசி வருகின்றது.
இடி, மின்னல் மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், கரையோரப் பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





