சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது
12 வயதுடைய மீகொட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த மூவரை மெகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீகொட, கல்வலமுல்ல பிரதேசத்தில் அவரது நெருங்கிய உறவினர்களான தந்தை மற்றும் மகன் மற்றும் அயலகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த சிறுமி இதனை மறைத்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சிறுமி தனது தாயிடம் எல்லாவற்றையும் கூறியதுடன், பொலிஸில் தாய் செய்த முறைப்பாட்டின் படி, இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.