ஈரானில் 3,375 பேர் உயிரிழப்பு! போர் பலி குறித்த அதிரவைக்கும் புள்ளிவிபரங்களை வெளியிட்டது ஈரான்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்த ஆறு வார காலத் தாக்குதல்களில், இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தடயவியல் மருத்துவ அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெடி அராணி (Abbas Masjedi Arani) இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அடையாளம் காணப்பட்ட இந்த உயிரிழப்புகளில் 2,875 ஆண்களும், சுமார் 500 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள சூழலில், இந்தத் துயரமான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




