ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக டோக்கியோ சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (27) பிற்பகல் சந்தித்தார்.
இந்த சந்திப்பு 10 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், இந்த நாட்டில் கடன் மறுசீரமைப்பு குறித்து உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை, ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்தியத் தலைவர் வாழ்த்து தெரிவித்ததோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் சுருக்கமான கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் இந்திய முதலீடுகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியத் தலைவரிடம் கேட்டுக்கொண்டதுடன், இதற்கு சாதகமான பதில்களைப் பெற்றுள்ள இந்தியத் தலைவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





