Welcome to Jettamil

திருகோணமலையில் அதிர்ச்சி: டிக்டொக் நட்பினால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Share

திருகோணமலையில் அதிர்ச்சி: டிக்டொக் நட்பினால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை – சம்பூர் காவல் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவரைப் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாக, ஈச்சிலம்பற்று காவல்துறையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14, 2025) 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஈச்சிலம்பற்று காவல்துறைப் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களில் ஒரு இளைஞர் டிக்டொக் சமூக ஊடகம் மூலம் குறித்த பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திச் சந்தித்துள்ளார்.

இதன் பின்னர், குறித்த இடத்திற்கு ஏனைய நண்பர்கள் வந்த நிலையில், அப்பெண் அத்துமீறலுக்கு உள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து ஈச்சிலம்பற்று காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை