மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று மிக விமரிசையாக ஆரம்பமாகின்றது. திருவிழாவின் தொடக்க நிகழ்வான துவஜாரோகண கொடி ஊர்வலம் இன்று காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை பல்வேறு விசேட பூசைகளும், வாகன பவனிகளும் நடைபெறவுள்ளன.
இந்த மகோற்சவத்தின் முக்கிய அங்கமான காவடி ஆட்டம் வரும் மார்ச் 1-ஆம் திகதியும், வரலாற்றுப் புகழ்பெற்ற பஞ்சரத பவனி மார்ச் 2-ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. மார்ச் 4-ஆம் திகதி தீர்த்தோற்சவமும் மார்ச் 5-ஆம் திகதி பூங்காவனத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது.





