இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை! இன்று பிற்பகல் முதல் பலத்த மழை பெய்யக்கூடும்
இலங்கையின் சில மாகாணங்களில் இன்று (22) பிற்பகல் வேளையில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





