Welcome to Jettamil

டெல் அவிவ் நகரை பிளந்த ஈரானிய ஏவுகணை! 100 கிலோ வெடிபொருட்களுடன் குடியிருப்பு பகுதியில் தாக்குதல்

Share

டெல் அவிவ் நகரை பிளந்த ஈரானிய ஏவுகணை! 100 கிலோ வெடிபொருட்களுடன் குடியிருப்பு பகுதியில் தாக்குதல்

இஸ்ரேலின் மத்திய டெல் அவிவ் பகுதியில் சுமார் 100 கிலோ வெடிபொருட்களை சுமந்து வந்த சக்திவாய்ந்த ஈரானிய ஏவுகணை ஒன்று இன்று (24.03.2026) அதிகாலை தாக்கியுள்ளது.

இஸ்ரேலின் பலத்த வான் பாதுகாப்பு அமைப்புகளை (Iron Dome) மீறி இந்த ஏவுகணை நேரடியாகக் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து வெடித்ததாக ‘சேனல் 12’ (Channel 12) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அதிபயங்கர வெடிப்பினால் அப்பகுதியிலிருந்த பல அடுக்குமாடி குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.

ஏவுகணை வெடிப்பினால் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசி வரும் சூழலிலும், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எவ்விதத் தடையுமின்றித் தீவிரமடைந்து வருவது சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை