Welcome to Jettamil

போருக்குக் காரணம் நான் இல்லை, பாதுகாப்புச் செயலாளர் தான்! – அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்!

Share

போருக்குக் காரணம் நான் இல்லை, பாதுகாப்புச் செயலாளர் தான்! – அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 4-வது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், இந்தப் போர் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

மெம்பீஸ் நகரில் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் பேசிய அவர், ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியவர் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானை அணுகுண்டு தயாரிக்க அனுமதிக்கக் கூடாது, இப்போதே தாக்குவோம்” என ஹெக்ஸெத் அழுத்தம் கொடுத்ததாக ட்ரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் தொடங்கியதற்கான காரணங்கள் குறித்து ட்ரம்ப் தொடர்ச்சியாக மாறுபட்ட விளக்கங்களை அளித்து வருகின்றார். ஒரு கட்டத்தில் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், மற்றொரு சந்தர்ப்பத்தில் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என விவரித்தார்.

தற்போது தனது அமைச்சரவை அதிகாரி மீதே பழியைச் சுமத்தியிருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதலுக்குத் தயாராக இருந்ததாகவும், அதுவே அமெரிக்காவை இந்தப் போருக்குள் இழுத்துவிட்டதாகவும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

எது எவ்வாறாயினும், ஈரானின் அணு ஆயுதக் கனவைச் சிதைப்பதே பிரதான நோக்கம் என ட்ரம்ப் நிர்வாகம் ஒருபுறம் கூறி வந்தாலும், தற்போது உள்வீட்டுப் பூசல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை