Welcome to Jettamil

ஈராக்கில் ஈரான் ஆதரவுப் படைகள் மீதான வான்வழித் தாக்குதல்! முக்கிய தளபதி பலி

Share

ஈராக்கில் ஈரான் ஆதரவுப் படைகள் மீதான வான்வழித் தாக்குதல்! முக்கிய தளபதி பலி

மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள ‘Popular Mobilization Forces’ (PMF) அமைப்பின் இராணுவத் தலைமையகத்தை இலக்கு வைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் குறித்த மாகாணத்தின் PMF செயல்பாட்டுத் தளபதியாக இருந்த சாத் துவை அல்-பைஜி (Saad Duwai Al-Baiji) கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலானது ஈராக்கின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் என்றும், சர்வதேச சட்டங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை என்றும் PMF அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் மிக முக்கியமான பிராந்தியக் கூட்டாளிகளில் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், மத்திய கிழக்கில் நிலவும் போரின் மற்றொரு தீவிர நிலையாகக் கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் இரத்தம் வீணாகாது என்றும், இதற்குப் பொருத்தமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட ஷியா மதத் தலைவர் அலி அல்-சிஸ்தானியின் அழைப்பின் பேரில் உருவாக்கப்பட்ட இந்த PMF அமைப்பு, தற்போது ஈராக்கின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

எனினும், இதில் ஈரானுடன் நெருங்கிய தொடர்புடைய பிரிவுகள் உள்ளதாகக் கூறி அமெரிக்கா ஏற்கனவே பலமுறை இவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை