Welcome to Jettamil

ரஷ்யா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல் : போர் மேலும் விரிவடையும் என எச்சரிக்கும் ரஷ்யா

Share

ரஷ்யா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல் : போர் மேலும் விரிவடையும் என எச்சரிக்கும் ரஷ்யா

ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பிரதான ஆயுத விநியோகப் பாதையான கஸ்பியன் கடல் பகுதியில் இஸ்ரேல் இன்று (25.03.2026) பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் முக்கியத் துறைமுகமான பந்தர் அன்சாலியில் (Bandar Anzali) உள்ள போர்க்கப்பல்கள், கடற்படை கட்டளை மையம் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோகச் சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் போருக்காக ஈரானிடமிருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் ட்ரோன்கள் மற்றும் அதிநவீன வெடிமருந்துகள் இந்தத் துறைமுகம் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் பல கப்பல்கள் சேதமடைந்துள்ளதுடன், விநியோகப் பாதையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த கஸ்பியன் கடல் பகுதிக்குள் போர் விரிவடைந்துள்ளமை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை ரஷ்யா வன்மையாகக் கண்டித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போரை மேலும் விரிவுபடுத்தி, ஒரு பாரிய மோதலுக்கு வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை