Welcome to Jettamil

ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்திய ஈரானின் கடற்படை தளபதி வீழ்த்தப்பட்டார்!

Share

ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்திய ஈரானின் கடற்படை தளபதி வீழ்த்தப்பட்டார்!

ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அட்மிரல் அலிரெஸா டங்சிரி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, ஈரானின் கடல்சார் பாதுகாப்பை முன்னின்று வழிநடத்தியவர் இவராவார். எனினும், இந்தத் தகவல் குறித்து ஈரானியத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக முடக்குவதற்குப் பின்னால் இருந்த முக்கிய நபர் டங்சிரி ஆவார். “ஈரானின் அனுமதியின்றி ஒரு சிறு படகு கூட இந்த நீரிணையைக் கடக்க முடியாது” என அண்மையில் X தளத்தில் பதிவிட்டுச் சர்வதேச நாடுகளுக்கு அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் கண்காணிப்பதிலும், ஏவுகணைத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதிலும் அவர் தீவிரமாகச் செயற்பட்டு வந்தார்.

சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த டங்சிரி, கடந்த 24 மணிநேரமாக எவ்விதப் பதிவுகளையும் இடவில்லை என்பது இச்செய்திக்கு வலுச்சேர்ப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை