Welcome to Jettamil

இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இரு தலைவர்கள்! கொல்லும் திட்டத்தைக் கைவிட்ட இஸ்ரேல்

Share

இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இரு தலைவர்கள்! கொல்லும் திட்டத்தைக் கைவிட்ட இஸ்ரேல்

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரைத் தனது இலக்குப் பட்டியலில் (Hit List) இருந்து இஸ்ரேல் நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் விடுத்த விசேட வேண்டுகோளை ஏற்று, அமெரிக்கா வழங்கிய கடும் அறிவுறுத்தலின் பேரில் இஸ்ரேல் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இவ்விரு தலைவர்களின் இருப்பிடங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இஸ்ரேலிடம் இருந்தபோதிலும், தாக்குதல் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு முக்கிய தலைவர்களையும் கொன்றால், எதிர்காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரானில் பொறுப்பான எவருமே இருக்கமாட்டார்கள்; அது போர்ச் சூழலை மீட்க முடியாத நிலைக்குக் கொண்டு செல்லும்” என பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வாதிட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து இந்தத் தாக்குதலைத் தடுத்துள்ளார். தற்போது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் மோதலைத் தணிக்க பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தீவிரமாக மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுப்பிய வரலாற்றுச் சிறப்புமிக்க 15 அம்ச அமைதித் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகவே ஈரான் பெற்றுள்ளது.

பல நாடுகள் ஈரானுடனான தொடர்பைத் துண்டித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டுமே இரு நாடுகளுடனும் நேரடித் தொடர்பில் உள்ளது. இதனால், வரவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பாகிஸ்தான் ஒரு முக்கிய தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை