நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் ஈரான் என்ற நாடே இருக்காது! – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மிகக் கடுமையான சொற்களால் வௌிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் எதை விரும்புகிறோமோ அதை ஈரான் செய்தே தீர வேண்டும்; அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால், அவர்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” (They’re not gonna have a country) என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்
செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானிய ஆட்சி தனது பிடிவாதத்தைக் கைவிட்டு அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஈரானின் எண்ணெய் வளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் ஏற்கனவே அமெரிக்காவின் இலக்கில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு நாட்டின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் பேசியிருப்பது சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





