Welcome to Jettamil

இஸ்ரேல் முன்னெப்போதையும் விட தற்போது வலிமையாகவுள்ளது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவிப்பு

Share

இஸ்ரேல் முன்னெப்போதையும் விட தற்போது வலிமையாகவுள்ளது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவிப்பு

அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் பயங்கரவாத ஆட்சியைத் தொடர்ந்து நசுக்கி வருவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் ஈரானின் 70 சதவீத உருக்கு (Steel) உற்பத்தித் திறனை இஸ்ரேலிய விமானப்படை அழித்துள்ளதாக அவர் பிரகடனப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் நிதி ஆதாரங்கள் மற்றும் ஆயுதத் தயாரிப்புத் திறன் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக நெதன்யாகு தெரிவித்தார். “ஈரான் முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது; இஸ்ரேல் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது” என அவர் முழங்கியுள்ளார்.

ஈரானின் தளபதிகள் கொல்லப்படுவதுடன், பாலங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தகர்க்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், வடபகுதி குடியிருப்புகளைப் பாதுகாக்கப் பாதுகாப்பு வலையத்தை (Security Zone) விரிவுபடுத்தி வருவதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்திலும் இஸ்ரேலிய மக்கள் காட்டி வரும் உறுதிக்கும், இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை