இணையத்தில் கசிந்தது விஜய்யின் ‘ஜனநாயகன்’ முழுத் திரைப்படம்! – சைபர் கிரைம் பொலிஸார் தீவிர விசாரணை!
அரசியல் காரணங்களுக்காகத் தணிக்கைக் குழுவினால் (CBFC) முடக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தற்போது சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், மூன்று மணிநேர முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.




