Welcome to Jettamil

168 பிஞ்சுக் குழந்தைகளின் நினைவாக ஈரானிய விமான இருக்கைகளில் வைக்கப்பட்ட இரத்தக்கறை படிந்த பாடசாலைப் பைகள்

Share

168 பிஞ்சுக் குழந்தைகளின் நினைவாக ஈரானிய விமான இருக்கைகளில் வைக்கப்பட்ட இரத்தக்கறை படிந்த பாடசாலைப் பைகள்

அமெரிக்காவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ள ஈரானிய உயர்மட்டப் பிரதிநிதிகள், ஒரு மனதை உருக்கும் அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

மினாப் (Minab) ஆரம்பப் பாடசாலை மீது அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த 168 சிறுவர், சிறுமிகளின் நினைவாக, அவர்கள் பயணித்த விமானத்தின் இருக்கைகளில் குழந்தைகளின் இரத்தக்கறை படிந்த பாடசாலைப் பைகள், காலணிகள் மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஈரான் பிரதிநிதிகள் பாகிஸ்தான் நோக்கிப் பயணம் செய்த அந்த விசேட விமானத்திற்கு, போரில் சிதைக்கப்பட்ட அந்தப் பாடசாலையின் நினைவாக ‘மினாப் 168’ எனப் பெயரிடப்பட்டிருந்தது.

168 உயிர்களைப் பலிவாங்கிய அந்தத் தாக்குதலின் வலியுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்துள்ள ஈரானியத் தூதுக்குழுவினர், உயிரிழந்த பிஞ்சுகளுக்கு விமானத்தினுள்ளேயே மௌன அஞ்சலி செலுத்தினர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையுமே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

“எமது குழந்தைகளின் இரத்தத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்ற செய்தியை உலகுக்கு உணர்த்தவே இந்த அஞ்சலி செலுத்தப்பட்டதாக ஈரானியத் தரப்பு தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை