Welcome to Jettamil

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் இஸ்ரேலியர்களுக்குத் தடை! – பாகிஸ்தான் அதிகாரிகளின் நேரடிப் பதிலடி

Share

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் இஸ்ரேலியர்களுக்குத் தடை! – பாகிஸ்தான் அதிகாரிகளின் நேரடிப் பதிலடி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைச் செய்தி சேகரிக்க இஸ்லாமாபாத் வந்த இஸ்ரேலிய ஊடகவியலாளர்களுக்குப் பாகிஸ்தான் அதிகாரிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர்.

“நாங்கள் இஸ்ரேலையோ அல்லது அதன் பிரஜைகளையோ அங்கீகரிக்கவில்லை” எனப் பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகப் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாகத் நீடிக்கும் தனது கடுமையான நிலைப்பாட்டைப் பாகிஸ்தான் இதன்போதும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குப் பாகிஸ்தான் ‘விசா ஆன் அரைவல்’ (Visa on Arrival) வசதியை வழங்கியிருந்தது.

இருப்பினும், இஸ்ரேலிய பிரஜைகளுக்கு இந்த வசதி வழங்கப்படாது எனப் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை