ஹோர்முஸ் முற்றுகைக்கு ஆதரவில்லை – பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவிப்பு
ஈரான் மீதான போருக்குள் பிரித்தானியா ஒருபோதும் இழுக்கப்பட மாட்டாது என அந்த நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள ஹோர்முஸ் நீரிணை மீதான கடற்படை முற்றுகைக்குப் பிரித்தானியா தனது ஆதரவை வழங்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து எவ்வளவு அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்க்கப் பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படுவதே எமது நோக்கம்; அதற்காகவே கடந்த சில நாட்களாக நாம் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்” எனப் பிரதமர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.




