Welcome to Jettamil

ஒரு பில்லியன் டொலர் மற்றும் அழகான பெண் வேண்டும்! – துருக்கியை மிரட்டும் உகாண்டா இராணுவத் தளபதி

Share

ஒரு பில்லியன் டொலர் மற்றும் அழகான பெண் வேண்டும்! – துருக்கியை மிரட்டும் உகாண்டா இராணுவத் தளபதி

உகாண்டா ஜனாதிபதியின் மகனும், இராணுவத் தளபதியுமான முஹூசி கைனருகபா, தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி அரசாங்கம் தமக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டும் என்றும், அந்நாட்டின் மிக அழகான பெண்ணைத் தமக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சோமாலியாவில் உகாண்டா இராணுவம் மேற்கொள்ளும் பாதுகாப்புப் பணிகளால் துருக்கி லாபம் அடைவதாகவும், அதற்கு ஈடாகவே இதைக் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கோரிக்கையை 30 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், துருக்கி உடனான தூதரக உறவுகள் துண்டிக்கப்படும் என்றும், உகாண்டா வான்வெளியில் துருக்கி விமானங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே 2022-ல் இத்தாலி பிரதமரைத் திருமணம் செய்ய 100 மாடுகளை வழங்க முன்வந்த முஹூசி, தற்போது துருக்கியை வம்புக்கு இழுத்துள்ளார். இவரின் இத்தகைய கருத்துக்கள் உகாண்டாவின் இராஜதந்திர உறவுகளில் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை