ட்ரம்ப்பின் முற்றுகைத் திட்டத்திற்கு இஸ்ரேல் முழு ஆதரவு! பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
ஈரானுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள கடற்படை முற்றுகைக்கு (Naval Blockade) இஸ்ரேல் தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளது, எனவே அதன் மீது முற்றுகை விதிக்க ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு சரியானது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இஸ்ரேல் அரசாங்கம் வாஷிங்டனுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த உறுதியான நிலப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்; எமது பாதுகாப்புத் தரப்பினர் அமெரிக்காவுடன் தொடர்ச்சியான தொடர்பில் உள்ளனர்” என நெதன்யாகு தனது வீடியோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





