அமெரிக்க முற்றுகையை உடைத்த சீனக் கப்பல்! – சர்வதேச கடற்பரப்பில் பெரும் இராஜதந்திர மோதல்!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான மற்றும் சீனாவுடன் தொடர்புடைய ‘ரிச் ஸ்டாரி’ (Rich Starry) என்ற எண்ணெய் கப்பல், அமெரிக்க கடற்படையின் தீவிர முற்றுகையையும் மீறி ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்த மிக முக்கியமான நீரிணைப் பகுதியில், அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், சீனக் கப்பல் தடையின்றி பயணித்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட கப்பல்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது கடற்படை பலத்தைப் பிரயோகித்து வரும் நிலையில், ‘ரிச் ஸ்டாரி’ கப்பலின் இந்தப் பயணம் ட்ரம்ப் நிர்வாகத்தின் முற்றுகைத் திட்டத்திற்கு விடப்பட்ட நேரடிச் சவாலாகப் பார்க்கப்படுகிறது.




