தகாத உறவால் உயிரிழந்த பெண்; தப்பியோடிய காதலன் பெண் பரிதாப மரணம்
மொனராகலை மாவட்டம், வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் நேற்று மாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொ*லை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும், அவருடன் சட்டவிரோதமாக வாழ்ந்து வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதே இந்தக் கொ*லைக்குக் காரணம் என முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொ*லைச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளார். அவரை உடனடியாகக் கைது செய்ய வெல்லவாய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முறையற்ற உறவுகளால் ஏற்படும் இத்தகைய வன்முறைகள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.




