Welcome to Jettamil

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்

Share

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

“முற்றுகை என்ற போர்வையில் அமெரிக்கா கடற்கொள்ளை மற்றும் கடல்வழித் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது” எனக் குற்றம் சுமத்தியுள்ள ஈரான், இதன் காரணமாகவே இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையை மீண்டும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானிய அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் ஈரானை நோக்கி வரும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தும் வரை, ஹார்முஸ் நீரிணை மீதான இந்தக் கடுமையான கட்டுப்பாடு நீடிக்கும் என ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.

திறக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த முக்கிய நீர்வழிப்பாதை மீண்டும் முடக்கப்பட்டிருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பலமடங்கு உயரும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே ஈரானின் இந்த அதிரடி நகர்வு பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை