Welcome to Jettamil

ஈரானைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைகள்! 23 கப்பல்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பு

Share

ஈரானைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைகள்! 23 கப்பல்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பு

ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீதான “கடல்வழி முற்றுகையை” (Maritime Blockade) அமெரிக்கா தொடர்ந்து அமுல்படுத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகமான CENTCOM அறிவித்துள்ளது.

இதற்காக அமெரிக்காவின் USS கான்பெரா (USS Canberra) என்ற அதிநவீன போர்க்கப்பல் அரபிக்கடலில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்க, ஈரானை நோக்கிச் சென்ற 23 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தொடர் முற்றுகையானது ஏற்கனவே எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடுமையாகச் சாடியுள்ளது.

இதற்குப் பதிலடியாக, சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணை மீது ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்கா தனது முற்றுகையை விலக்கும் வரை ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சீராகாது என ஈரான் எச்சரித்துள்ளதால், பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை