ஹார்முஸ் நீரிணையில் வெடித்தது போர்! இரண்டு கப்பல்கள் மீது சரமாரித் தாக்குதல்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் இன்று சனிக்கிழமை இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடல்சார் பாதுகாப்பு ஆதாரங்களின்படி, நீரிணையைக் கடக்க முயன்ற போதே இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தாக்குதல்களை நடத்தியது யார்? என்பது குறித்த விபரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன.
ஹார்முஸ் நீரிணையைத் தான் மூடுவதாக ஈரான் அறிவித்து, அமெரிக்கா அங்குப் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேசச் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




