Welcome to Jettamil

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை! கட்டுநாயக்கவில் உற்சாக வரவேற்பு

Share

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை! கட்டுநாயக்கவில் உற்சாக வரவேற்பு

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தார்.

இன்று காலை 09.30 மணியளவில் ‘இந்தியா – 01’ எனும் இந்திய விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தின் அதிவிசேட விருந்தினர் முனையத்திற்கு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதியை, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குழுவினர் மலர்ச்செண்டு கொடுத்து உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை