Welcome to Jettamil

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நேர்ந்த பெரும் சோகம்! விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி 80 பேர் பலி

Share

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நேர்ந்த பெரும் சோகம்! விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி 80 பேர் பலி

கடந்த ஏப்ரல் 10-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரையிலான புத்தாண்டு விடுமுறைக் காலப்பகுதியில், வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் வீதி விபத்துக்களினால் மட்டும் 53 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளிலேயே அதிகளவிலான விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவேகம் மற்றும் கவனக்குறைவே இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வீதி விபத்துக்கள் ஒருபுறமிருக்க, புத்தாண்டு காலத்தில் நீர்நிலைகளில் நீராடச் சென்ற 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகப் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

கொண்டாட்டங்களின் போது மக்கள் போதிய பாதுகாப்பு விழிப்புணர்வுடன் இல்லாததே இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை