அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பலில் சீனா ஏவுகணைக இரசாயன பொருட்கள்! வெளியாகிய அறிக்கை
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட ‘டூஸ்கா’ (Touska) என்ற ஈரானியக் கப்பல், சீனாவிலிருந்து ஏவுகணைகளுக்கான இரசாயனப் பொருட்களை ஏற்றி வந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
தனது X தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், நிறுத்துமாறு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான உத்தரவுகளை அந்தக் கப்பல் ஏற்க மறுத்ததாலேயே இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கச் சீனா மறைமுகமாக உதவுகிறது என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர் சாடியுள்ளார்.
‘டூஸ்கா’ கப்பல் ஏற்கனவே அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான ஈரானிய இஸ்லாமியக் குடியரசு கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் (IRISL) ஒரு பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஓமான் வளைகுடாவில் உள்ள சாபஹார் துறைமுகம் அருகே அமெரிக்கப் படைகள் கப்பலில் ஏறிச் சோதனையிட்டதை ‘ஆயுதமேந்திய கடற்கொள்ளை’ என ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.
கப்பல் சீனாவிலிருந்து புறப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈரான் இராணுவம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது. இதனால் சீனா, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கோணப் போர் பதற்றம் உருவாகியுள்ளது.




