Welcome to Jettamil

வலியால் கண்கலங்கிய ‘கயல்’ சைத்ரா ரெட்டி! டிரெண்டாகும் காதுகுத்து காணொளி

Share

வலியால் கண்கலங்கிய ‘கயல்’ சைத்ரா ரெட்டி! டிரெண்டாகும் காதுகுத்து காணொளி

பிரபல ரிவியில் 2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.

நடுத்தர குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கும் பெண்ணாகக் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், இதற்கு முன்னதாக ‘யாரடி நீ மோகினி’ தொடரில் மிரட்டலான வில்லியாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தவர்.

தற்போது இல்லத்தரசிகளின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் சைத்ரா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய காணொளி ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தனது காதின் மேல் பகுதியில் (Cartilage) புதிதாகக் காது குத்திக்கொள்ளும் காணொளியைப் பகிர்ந்துள்ள சைத்ரா, அந்தச் சமயத்தில் ஏற்பட்ட வலியால் கண்கலங்கியுள்ளார்.

காது குத்தி 10 நாட்களாகியும் இன்னும் வலியை அனுபவித்து வருவதாகவும், இருப்பினும் இந்தப் புதிய தோற்றம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை