ஈரானிய கப்பலில் சீனா ஏவுகணை இரசாயன பொருட்கள்! – சீனா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அமெரிக்கக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல், சீனாவிலிருந்து ஏவுகணைத் தயாரிப்பு இரசாயனங்களை ஏற்றி வந்ததாக நிக்கி ஹேலி விடுத்த குற்றச்சாட்டுகளைச் சீனா இன்று நிராகரித்துள்ளது.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், குறித்த கப்பல் ஒரு வெளிநாட்டுக் கொடி கொண்ட சரக்குக் கப்பல் என்றும், இதற்கும் சீனாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தீய நோக்கத்துடன் சீனாவை இதில் தொடர்புபடுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா சீனா மீது வரி உயர்வுகளை மேற்கொண்டால், அதற்கான தகுந்த பதிலடி நடவடிக்கைகளைச் சீனா முன்னெடுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




