Welcome to Jettamil

விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்க! – குட்டி ரசிகர்களிடம் விஜய் உருக்கமான வேண்டுகோள்

Share

விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்க! – குட்டி ரசிகர்களிடம் விஜய் உருக்கமான வேண்டுகோள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில்,நேற்றுடன் பிரசாரம் ஓய்வடைந்தது.

சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகவும் உருக்கமாகவும் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அங்கிருந்த சிறுவர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

“உங்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ அல்லது திண்பண்டங்களையோ பெற நீங்கள் எப்படி அடம் பிடித்து சாதிக்கிறீர்களோ, அதுபோல உங்கள் விஜய் மாமா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எனக்காக வாக்கு கேளுங்கள்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, வாக்களிக்கச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெரியவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் என அவர் சிறுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

30 ஆண்டுகால திரையுலகப் பயணத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் சக்தியே தனது அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை