Welcome to Jettamil

ஷம்மி சில்வாவிற்கு ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு! இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலக அறிவுறுத்தல்

Share

ஷம்மி சில்வாவிற்கு ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு! இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலக அறிவுறுத்தல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்களை அடுத்து, அதன் தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

வீரர்களிடமிருந்தும் விளையாட்டு ஆர்வலர்களிடமிருந்தும் எழுந்த கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன தலைமையில் புதிய இடைக்காலக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல்களைச் சுத்தப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதால் ஐசிசி இதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பதவி விலகுவதற்கு முன்னதாகச் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஷம்மி சில்வா ஜனாதிபதியிடம் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source : IBC

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை