ஒட்டு மொத்த தமிழ்நாடே காத்திருக்கும் தமிழக தேர்தல் இன்று – தேர்தலில் வாக்களிப்பதற்காக முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நடிகர் அஜித் குமார் துபாயிலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.
தனது படப்பிடிப்புக்காக அவர் துபாய் சென்றிருந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அனைத்துப் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தாயகம் வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் வருகை தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பொதுவாகத் தேர்தல் நடைபெறும் நாட்களில், அதிகாலையிலேயே சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று முதல் ஆளாக வாக்களிப்பதை நடிகர் அஜித் வழக்கமாகக் கொண்டுள்ளார்.





