நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! கிரிஷ் நிறுவன விவகாரத்தில் மீண்டும் விசாரணை
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபரனா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நேரில் ஆஜராகி இருந்தார்.
இன்றைய விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த வழக்கினை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறிப் பெறப்பட்ட இந்தப் பணம், தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
நீண்டகாலமாக இழுபறியிலுள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் மே மாத இறுதியில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




