சர்ச்சைகளுக்கு மத்தியில் கெனிஷாவுடன் ஜோடியாக சென்ற ரவி மோகன்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ள நிலையில், நடிகர் ரவி மோகன் தனது தோழியும் பாடகியுமான கெனிஷாவுடன் ஜோடியாகத் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
ஆர்த்தியுடன் விவாகரத்து அறிவிப்பு வெளியானதிலிருந்தே கெனிஷா தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
முன்னதாக ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஒரே நிற உடையில் ஜோடியாகக் கலந்துகொண்ட இவர்கள், இப்போது தேர்தல் நாளன்று திருப்பதியில் காட்சியளிப்பது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தரிசனம் முடித்துத் திரும்பிய ரவி மோகன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது “அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டேன்” எனத் தெரிவித்ததோடு, தமிழக மக்களுக்கு “Happy Election Day” என்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆர்த்தியைப் பிரிந்ததற்குத் தனக்குத் தரப்பட்ட மரியாதைக் குறைவே காரணம் என அவர் கூறி வந்தாலும், தொடர்ந்து கெனிஷாவுடன் அவர் பொது இடங்களில் வலம் வருவது, அவர் கெனிஷாவுக்காகவே மனைவியைப் பிரிந்தாரா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.
தேர்தல் பரபரப்பைத் தாண்டி இவர்களது திருப்பதி புகைப்படங்கள் இப்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன.




